15க்கும் மேற்பட்ட தவறான தீர்ப்புகள்:அம்பயரை கண்தெரியாதவர் என்று விமர்சித்த ரசிகர்


15க்கும் மேற்பட்ட தவறான தீர்ப்புகள்:அம்பயரை கண்தெரியாதவர் என்று விமர்சித்த ரசிகர்
x
தினத்தந்தி 6 Aug 2019 6:12 AM GMT (Updated: 6 Aug 2019 7:40 AM GMT)

ஆஷஸ் தொடரில் தவறான முடிவுகளை வழங்கிய அம்பயர் ஜியோல் வில்சனை கண்தெரியாதவர் என்று ரசிகர் விமர்சித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பர்மிங்ஹாம்: 

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 374 ரன்களை சேர்த்தனர். 2-வது இன்னிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 487 ரன்களை சேர்த்தது.இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார்.  இறுதியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 இப்போட்டியில் போட்டியின் துவக்கத்திலிருந்தே  வெஸ்ட் இண்டீஸ் அம்பயர் ஜியோல் வில்சன் மற்றும் மற்றொரு அம்பயரான அலீம் தாரும் பல முறை தவறான தீர்ப்புகளை அளித்து அதிர்ச்சி அளித்தனர். இந்த இருவரும் இணைந்து 15க்கும் மேற்ப்பட்ட தவறான தீர்ப்புகளை அளித்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் அதிர்ச்சிக்குள்ளான  ரசிகர் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் அம்பயர் ஜியோல் வில்சனின் விக்கிப்பீடியா பக்கத்தில் சர்வதேச கண் தெரியாத அம்பயர் என்று மாற்றினார். 1966ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி டிரினாட், டோபாகோவில் பிறந்தவர் ஜியோல் வில்சன், இவர் ஒரு கண் தெரியாத சர்வதேச அம்பயர் என்று திருத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இப்போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளர்களும், அம்பயர்களின் முடிவுகளை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story