வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக இரட்டை சதம் விளாசிய சுப்மான் கில் : காம்பீர் சாதனை முறியடிப்பு


வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக இரட்டை சதம் விளாசிய சுப்மான் கில் :  காம்பீர் சாதனை முறியடிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2019 6:39 AM GMT (Updated: 10 Aug 2019 6:39 AM GMT)

வெஸ்ட்இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியின் வீரர் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.

டிரினிடாட்,

வெஸ்ட்இண்டீஸில் நடைபெற்று வரும் அதிகாரப்பூர்வமற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 201 ரன்களும், வெஸ்ட்இண்டீஸ் ஏ அணி 194 ரன்களும் எடுத்தன. 8 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ஏ அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த தடுமாரிய நிலையில் சுப்மான் கில்,  ஹனுமா விகாரி கூட்டணி அணியை சரிவில் இருந்தது.

அபாரமாக விளையாடிய 19 வயதான சுப்மான் கில் 247 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். அதேவேளையில் ஹனுமான் விகாரி 185 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இந்தியா ஏ அணி 90 ஓவர்களில் 365 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது சுப்மான் கில் 204, ஹனுமா விகாரி 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தனர்.

இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுப்மான் கில். 

இதற்கு முன்னர் கடந்த 2002-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில்  20 வயதில் கவுதம் காம்பீர் 218 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதனையடுத்து 373 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் ஏ அணியானது 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது.



Next Story