இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை


இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 10 Aug 2019 3:34 PM GMT (Updated: 10 Aug 2019 3:34 PM GMT)

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல்  உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துணை கேப்டனாகவும் சுரேஷ் ரெய்னா அசத்தி வருகிறார்.

இதையடுத்து சுரேஷ் ரெய்னா நீண்டநாட்களாக முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, 4 முதல் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில், அறுவை சிகிச்சை செய்த சுரேஷ் ரெய்னா, விரைவில் குணமடைய விரும்புகிறோம் என தெரிவித்துள்ளது.


Next Story