கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவின் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக குயின்டன் டி காக் நியமனம் + "||" + De Cock to lead in T20Is against India; new faces in squads

தென்ஆப்பிரிக்காவின் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக குயின்டன் டி காக் நியமனம்

தென்ஆப்பிரிக்காவின் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக குயின்டன் டி காக் நியமனம்
தென்ஆப்பிரிக்காவின் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா,

தென்ஆப்பிரிக்காவின் 20 ஓவர்  கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்ததால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை, 2023-ல் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை கட்டமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்  முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒருநாள்  அணியின் கேப்டனாக செயல்பட்ட பாப் டு பிளிசிஸ் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக மட்டும் தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு டெம்பா பவுமா துணைக் கேப்டனாகவும், டி20 அணிக்கு டஸ்சன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பைக்குப் பின் தென்ஆப்பிரிக்கா அணி முதலாவதாக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அந்த தொடரில் டி காக் கேப்டனாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...