புதிய துறையில் முதலீடு செய்துள்ள மகேந்திரசிங் டோனி


புதிய துறையில் முதலீடு செய்துள்ள மகேந்திரசிங் டோனி
x
தினத்தந்தி 14 Aug 2019 11:15 AM GMT (Updated: 14 Aug 2019 11:15 AM GMT)

கார் பிரியரான மகேந்திரசிங் டோனி கார் வாங்கும், விற்கும் நிறுவனமான கார்ஸ் 24 நிறுவனத்தில் இணைய உள்ளார்.

குர்கிராம்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் டோனி, கார் வாங்கும், விற்கும் நிறுவனமான கார்ஸ் 24 நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராகவும், தூதராகவும் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது. 

கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கார்ஸ் 24 நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய கார் வாங்கும், விற்கும் தளமாக உள்ளது. கார்களை எளிதாக  விற்கவும் பயன்படுத்திய கார்களை வாங்கவும் கார்ஸ் 24 உதவுகிறது. தற்போது 35 நகரங்களில் 155-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டுள்ள கார்ஸ் 24 நிறுவனம், இரண்டாம் தர நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விரிவடைவதைக் குறிக்கோளாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.

இந்நிலையில், கார்ஸ் 24 நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராகவும், தூதராகவும் பொறுப்பேற்பார் என கார்ஸ் 24 நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைமை இயக்குநர் விக்ரம் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்ஸ் 24 நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைமை இயக்குநர் விக்ரம் சோப்ரா கூறுகையில்,

“கார்ஸ் 24 குடும்பத்திற்கு டோனியை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு முன்மாதிரி மற்றும் ஹீரோவாக உள்ளார். டோனி எதிலும் புதுமையை விரும்புபவர். அவரின் தொடர் தேடல்கள், புதுமை மற்றும் தீர்வுகளைக் காணும் அவரது திறன் ஆகியவைதான் அவரை இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கேப்டனாக ஆக்கியுள்ளது என்றார். மேலும் இந்த ஒப்பந்தம் குறித்த முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

டோனியின் இந்த முதலீட்டின் மூலம் அவர் கிரிக்கெட் ஓய்விற்க்கு பின் இது போன்ற பல்வேறு தொழிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story