கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்! + "||" + Virat Kohli Enjoys "Stunning Day At Beach With Boys" Ahead Of West Indies Tests

டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்!

டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி தன்னுடைய அணியினருடன் ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் பொழுதை கழித்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி தன்னுடைய அணியினருடன் ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் நேரத்தை செலவழித்தார். 

"பாய்ஸுடன் இது ஒரு சிறந்த நாளாக இருந்தது" என்று விராட் கோலி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இவ்வாறு பதிவிட்டார். இந்தப் புகைப்படத்தில் மயங்க் அகர்வால், பும்ரா, இஷாந்த் ஷர்மா, ரிஷப் பன்ட், ரஹானே, ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி அடுத்து, டெஸ்ட் போட்டியிலும் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மற்றும் பேட்ஸ்மேனை முன்னெப்போதையும் விட கடினமாக்கும் என்று விராட் கோலி கூறினார்.

"அதிக போட்டிகள் நிறைந்த விளையாட்டாக டெஸ்ட் போட்டிகள் இருக்க போகின்றன. நாம் விளையாடும் போட்டிகளுக்கு பல நோக்கங்கள் இருப்பதாக அமைய போகிறது. சரியான நேரத்தில் இது சரியான போட்டியாக அமைய போகிறது" என்று விராட் கோலி கூறினார்.

"முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்" போட்டியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. இரண்டு வருடங்கள், 27 தொடர்கள், 71 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.

முன்னதாக, மூன்று டி20 போட்டிகளை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் 2-0 என்று வென்றது. முதல் போட்டி மழையால் தடைப்பட்டது.

இந்திய அணி முதல் முறையாக பெயர் மற்றும் நம்பருடன் கூடிய ஜெர்ஸியை அணிந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கிறது இந்திய அணி. விராட் கோலி தன்னுடைய ஜெர்ஸியில் பெயர் மற்றும் நம்பர் 18 ஆகியவைற்றை பதிவிட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரஹானே மற்றும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் மற்றும் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியினர் ஜெர்ஸியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.தொடர்புடைய செய்திகள்

1. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
2. ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி
ஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
3. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
4. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும்: இந்தியா வேண்டுகோள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.
5. ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷியா
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்திய அணி, ரஷியாவுடன் மோத உள்ளது.