ஆஷஸ் டெஸ்ட்: வார்னர் அரைசதம் அடித்தார்


ஆஷஸ் டெஸ்ட்: வார்னர் அரைசதம் அடித்தார்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:24 PM GMT (Updated: 22 Aug 2019 10:24 PM GMT)

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது.

லீட்ஸ், 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக 1¼ மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இங்கிலாந்தின் பந்து வீச்சில் தடுமாறிய தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸ் 8 ரன்னிலும், அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 8 ரன்னிலும் வெளியேறினர். இதன் பின்னர் டேவிட் வார்னரும், மார்னஸ் லபுஸ்சேனும் அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். இந்த தொடரில் முதல்முறையாக அரைசதம் அடித்த வார்னர் 61 ரன்களில் (94 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார். அவருக்கு பிறகு இறங்கிய டிராவிஸ் ஹெட் (0), மேத்யூ வேட் (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 43 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது லபுஸ்சேன் 62 ரன்களுடனும், கேப்டன் டிம் பெய்ன் 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Next Story