கிரிக்கெட்

கொலை மிரட்டல் விடுப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார் + "||" + Poses a threat to kill Report on Indian cricketer

கொலை மிரட்டல் விடுப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார்

கொலை மிரட்டல் விடுப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார்
கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முனாப் படேல் மீது வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் 2011 ஆம் ஆண்டு  உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கியவர். முனாப் படேல் இந்திய அணிக்காக  13 டெஸ்ட் போட்டிகள், 70 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  தற்போது முனாப் படேல் குஜராத் மாநிலம் வடோதரா கிரிக்கெட் சங்க ஆலோசகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி என்பவர், தனக்கு முனாப் பட்டேல் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் கொடுத்துள்ளார். சங்கத்தில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு முனாப் படேல்தான் காரணம் என்றும் தேவேந்திர ஸ்ருதி அந்த புகாரில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் இந்த புகாரை மறுத்துள்ள முனாப் படேல், 

தேர்வு குழுவில் அவருக்கு பிரச்சினை உள்ளது. நான் அணியின் ஆலோசகர் மட்டும் தான். மற்றபடி எனக்கும் சங்கத்துக்கும் தொடர்பில்லை, தேவையில்லாமல் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது. என் மீதான புகார் அடிப்படை ஆதாரமற்றது என முனாப் படேல் தெரிவித்துள்ளார்.