கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து 301 ரன்களில் ஆல்-அவுட் + "||" + 4th Test against Australia, England all-out in 301 runs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து 301 ரன்களில் ஆல்-அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து 301 ரன்களில் ஆல்-அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 301 ரன்கள் எடுத்துள்ளது.
மான்செஸ்டர்,

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸ்திரேலிய அணி தனது முதல்  இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து  497 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதில் அபாரமாக ஆடிய ஸ்மித் 211 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராடு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய  இங்கிலாந்து அணி 4-வது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரோரி பர்ன்ஸ் 81 ரன்னும், ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதனையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சில் 196 ரன்கள் முன்னிலையுடன்  களமிறங்கி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சில் தேநீர் இடைவெளியின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 63  ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பேரழிவு என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - அட்டவணை வெளியீடு
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
3. ரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டது
ரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்கள் இன்று தங்களது முதல்பக்கங்களை கருப்பாக வெளியிட்டன.
4. ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரம் சியாவுக்கு விசித்திர நோய்
ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரமான சியா, விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கதாநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.