கிரிக்கெட்

பயங்கரவாதிகள் மிரட்டல்:இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா? + "||" + Terrorist Intimidation: Will Sri Lanka Cricket team go to Pakistan?

பயங்கரவாதிகள் மிரட்டல்:இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா?

பயங்கரவாதிகள் மிரட்டல்:இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா?
இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
கொழும்பு, 

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. பாதுகாப்பு அச்சம் காரணமாக கருணாரத்னே, மலிங்கா உள்பட 10 முன்னணி வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகி விட்டனர். இதனால் 2-ம் தர இலங்கை அணியே பாகிஸ்தானுக்கு செல்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் இருப்பதாக இலங்கை பிரதமர் அலுவலகம் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி பாகிஸ்தான் செல்லுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.