கிரிக்கெட்

சமூக வலைத்தளங்களில் மீண்டும் டிரெண்ட் ஆன டோனி ஹேஷ்டேக் + "||" + Dhoni hashtag Trent

சமூக வலைத்தளங்களில் மீண்டும் டிரெண்ட் ஆன டோனி ஹேஷ்டேக்

சமூக வலைத்தளங்களில் மீண்டும் டிரெண்ட் ஆன டோனி ஹேஷ்டேக்
இந்திய அணி வீரர் டோனி தொடர்பான ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான  டோனி எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர்.  அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உண்டு. 

இதனையடுத்து டோனி கேப்டனாக பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும் இந்நிலையில்  #12YEARSOFCAPTAINDHONI என்ற ஹேஸ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

 கடந்த 2007 ஆம் ஆண்டு கேப்டனாக பதவியேற்று கிரிக்கெட் உலகில் தோனி செய்த சாதனைகள், அணிக்காக இறுதிவரை போராடி வெற்றி தேடி தந்த ஆட்டங்களின் வீடியோ காட்சிகள் , புகைப்படங்களை பதிவிட்டு டோனி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.