கிரிக்கெட்

முன்னாள் கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே காலமானார் + "||" + Former cricketer Madhav Apte passes away

முன்னாள் கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே காலமானார்

முன்னாள் கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே காலமானார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாதவ் ஆப்தே மும்பையில் காலமானார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாதவ் ஆப்தே  உடல் நலக்குறைவால் மும்பையின் பீரீச் கேண்டி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாதவ் ஆப்தே சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 86 ஆகும்.

இந்திய அணிக்காக 1952-53 காலக்கட்டங்களில் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள மாதவ் ஆப்தே 542 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் மாதவ் ஆப்தே 67 முதல் தர ஆட்டங்களில் 3336 ரன்களும், ஆறு சதங்கள் மற்றும் 16 அரை சதங்கள் அடித்துள்ளார். மாதவ் ஆப்தேவின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.