கிரிக்கெட்

சூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது - கவாஸ்கர் + "||" + Gambling cannot be completely controlled - Gavaskar

சூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது - கவாஸ்கர்

சூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது - கவாஸ்கர்
சூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘வளர்ந்த சமுதாயத்தில் கூட குற்றவாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். இதேபோல் கிரிக்கெட்டிலும் பேராசை பிடித்தவர்கள் இருக்கக்கூடும். ஊழல் தடுப்பு பிரிவினர் வீரர்களுக்கு பாடம் நடத்தினாலும் கிரிக்கெட்டில் சூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம்’ என்று தெரிவித்துள்ளார்.