கிரிக்கெட்

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார்’ -ரஹானே + "||" + In Test cricket Rohit Sharma will play better Rahane

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார்’ -ரஹானே

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார்’ -ரஹானே
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவாரா? என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியாது. அவர் தொடக்க வீரராக இறங்கினால், எனக்கு மகிழ்ச்சி தான்.
மும்பை,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவாரா? என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியாது. அவர் தொடக்க வீரராக இறங்கினால், எனக்கு மகிழ்ச்சி தான். வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ரோகித் சர்மா போன்ற திறமையான வீரரை வெளியே உட்கார வைத்தது கடினமாக இருந்ததாக சொல்லியிருந்தேன். அவர் கடினமாக உழைத்து வருகிறார். மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவர் நன்றாக செயல்படுவார். ரோகித் சர்மாவிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருப்பதை நாங்கள் அறிவோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பது என்பது மனநிலையை சார்ந்த விஷயம் ஆகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் இறங்கும் போது, நம் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டியது தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரம் இரண்டு பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், வழக்கமான ஆட்ட பாணியை கைவிட்டு அவசரப்படாமல் சுதாரித்து கொள்ள வேண்டும். அத்தகைய பந்து வீச்சை சமாளித்து, அதன் பிறகு உங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நான் உண்மையிலேயே உற்சாகமாக அனுபவித்து விளையாடுகிறேன். மீண்டும் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்ப விரும்புகிறேன். ஆனால் இப்போதைக்கு தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் மீதே முழு கவனமும் உள்ளது. இவ்வாறு ரஹானே கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாண்டிங்குக்கு ரோகித் சர்மா புகழாரம்
பாண்டிங்குக்கு ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
2. டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி? நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் வெளியிட்ட சுவாரஷ்ய தகவல்
கிரிக்கெட் போட்டியில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி இருக்கும்? என நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் சுவாரஷ்ய தகவலை தெரிவித்துள்ளார்.
3. டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை...
நியூசிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு வெலிங்டனில் தொடங்குகிறது.
4. நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய வீரர் ரோகித் சர்மா காயத்தால் விலகல்
நியூசிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விலகி இருக்கிறார்.
5. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி: சதம் அடித்தார் ரோகித் சர்மா
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார்.