கிரிக்கெட்

தண்ணீர் தேங்கிய இடத்திலும் பயிற்சி செய்யும் சச்சின் தெண்டுல்கர் + "||" + Stagnant water Place Practice Sachin Tendulkar

தண்ணீர் தேங்கிய இடத்திலும் பயிற்சி செய்யும் சச்சின் தெண்டுல்கர்

தண்ணீர் தேங்கிய இடத்திலும் பயிற்சி செய்யும் சச்சின் தெண்டுல்கர்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தண்ணீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்யும் வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மும்பை,

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் சச்சின் தெண்டுல்கர். 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்த சச்சின் தெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்றார். அதன்பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது தனது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் பயிற்சி மேற்கொள்வது போல் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 

அதில், விளையாட்டின் மீதான அன்பும், ஆர்வமும் எப்போதும் பயிற்சி செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டறிய உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக  நாம் என்ன செய்கிறோமோ, அதனை நாம் அனுபவித்து செய்யவேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநில தேர்தல்: வாக்களித்தார் சச்சின் தெண்டுல்கர்
மும்பை மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் சச்சின் தெண்டுல்கர் வாக்களித்தார்.