கிரிக்கெட்

வாரிசுகளும்... இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும்... + "||" + Family season in BCCI as sons, daughters & brothers of top officials take over state bodies

வாரிசுகளும்... இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும்...

வாரிசுகளும்... இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாரிசுகளுக்கான அமைப்பாக மாறி உள்ளது.
கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன் அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக  வாரிசுகள் அதிக அளவில் தேர்வாகி உள்ளனர்.

* மத்திய அமைச்சராக இருக்கும் பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் அருண் தாக்கூர் வெள்ளிக்கிழமை இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார்.

* பிசிசிஐ முன்னாள் தலைவர் நாராயணசாமி சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் வியாழக்கிழமை தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.

*  பிசிசிஐ முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷாவின் மகன் ஜெய்தேவ் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத் தலைவரானார்.

* மூத்த கோவா நிர்வாகி வினோத் பாட்கேவின் மகன் விபுல் கோவா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

* முன்னாள் பி.சி.சி.ஐ துணைத் தலைவர் சிராயு அமினின் மகன் பிரணவ், பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

* மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்  சமீபத்தில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளராக இருந்தார் அமித் ஷா தான்  தலைவர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிசிசிஐ தலைவர் கங்குலி, மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளரா?
பிசிசிஐ தலைவர் கங்குலி பா.ஜனதாவில் சேர்கிறார் என்றும் அவர் மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.
2. இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் -பிசிசியின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று பிசிசியின் புதிய தலைவராக தேர்வான சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.
3. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் கபில் தேவ் ராஜினாமா!
கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.
4. 2 பொறுப்புகளை வகித்துவரும் பாகிஸ்தான் பயிற்சியாளரின் சம்பளம் எவ்வளவு?
2 பொறுப்புகளை வகித்துவரும் பாகிஸ்தான் பயிற்சியாளரின் சம்பளம் எவ்வளவு? அவரே அது குறித்து ருசிகரமான பதில் அளித்து உள்ளார்.
5. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் பொறுப்பேற்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...