இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆபரேஷன் லண்டனில் நடந்தது


இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆபரேஷன் லண்டனில் நடந்தது
x
தினத்தந்தி 5 Oct 2019 10:30 PM GMT (Updated: 5 Oct 2019 8:33 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கு பிறகு முதுகின் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கு பிறகு முதுகின் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த பிரச்சினை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினர் அவருக்கு ஆபரேஷன் செய்வது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று சிபாரிசு செய்தனர். இதைத்தொடர்ந்து லண்டன் சென்ற ஹர்திக் பாண்ட்யாவுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான உடற்பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஆபரேஷன் நடந்து இருக்கும் தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் ஹர்திக் பாண்ட்யா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று தெரிகிறது. ஏற்கனவே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுவலி பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story