கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்: இந்தியா முதலிடம் + "||" + World Test Championship List India tops the list

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்: இந்தியா முதலிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்: இந்தியா முதலிடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இதன்மூலம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இத்தொடரில், இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்துள்ளது.  

இதையடுத்து புதிதாக வெளியாகியுள்ள  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கி இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. 

மேலும் இப்பட்டியலில் நியூசிலாந்து, இலங்கை தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன. தென்ஆப்பிரிக்காவுக்கு உலக சாம்பியன்ஷிப்பில் இது தான் முதல் போட்டியாகும். அதனால் அந்த அணி இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.