கிரிக்கெட்

சூதாட்ட சர்ச்சை: அமீரக வீரர்கள் 3 பேர் இடைநீக்கம் + "||" + The gambling controversy Emirates Players 3 suspended

சூதாட்ட சர்ச்சை: அமீரக வீரர்கள் 3 பேர் இடைநீக்கம்

சூதாட்ட சர்ச்சை: அமீரக வீரர்கள் 3 பேர் இடைநீக்கம்
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய அமீரக வீரர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்
துபாய், 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 14 அணிகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் அணி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணியைச் சேர்ந்த கேப்டன் முகமது நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அகமது ஆகியோர் ஊழல் தடுப்பு விதியை மீறியதாக நேற்று அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் உள்ளூர் வீரர் மெஹர்தீப் சயாகருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. முகமது நவீத்துக்கு பதிலாக அமீரக அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் அகமது ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.