கிரிக்கெட்

இந்திய தேர்வு குழு பதவியில் நீடிக்குமா? + "||" + Will the Indian select committee remain in office?

இந்திய தேர்வு குழு பதவியில் நீடிக்குமா?

இந்திய தேர்வு குழு பதவியில் நீடிக்குமா?
இந்திய தேர்வு குழு பதவியில் நீடிக்குமா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கிரிக்கெட் வாரியத்தின் முந்தைய விதிமுறைப்படி பார்த்தால் தேர்வு குழுவின் பதவி காலம் அதிகபட்சம் 4 ஆண்டுகள் தான். அதை எம்.எஸ்.கே. பிரசாத் குழுவினர் நிறைவு செய்து விட்டனர். ஆனால் திருத்தப்பட்ட புதிய விதிமுறைப்படி தேர்வு குழு அதிகபட்சம் 5 ஆண்டுகள் பொறுப்பில் இருக்க முடியும். இதன்படி அவர் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தொடரலாம். தேர்வு குழுவினரின் பதவி காலம் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி விரைவில் முடிவு எடுக்க உள்ளார். அனேகமாக தற்போதைய தேர்வு குழுவினர் மாற்றப்படுவார்கள் என்றே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.