கிரிக்கெட்

கர்நாடக பிரிமியர் லீக்கில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் கைது + "||" + Veteran domestic cricketer arrested in Karnataka Premier League fixing scandal

கர்நாடக பிரிமியர் லீக்கில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் கைது

கர்நாடக பிரிமியர் லீக்கில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் கைது
கர்நாடக பிரிமியர் லீக்கில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் கர்நாடக பிரிமியர் லீக் என்ற டி 20 தொடர் நடத்தப்படுகிறது. இந்த  தொடரில், ஸ்பாட் பிக்ஸிங் என்ற முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சி.எம். கவுதம் மற்றும் கரநாடக அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் பெல்லாரி டஸ்கர்ஸ் அணி வீரருமான அப்ரார் கவுசி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் சேர்த்து ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெல்காவின் அணியின் உரிமையாளரும் அடங்குவார்.

கர்நாடக பிரிமியர் லீக் 2019 இறுதிப்போட்டியில், தற்போது கைது செய்யப்பட்ட இரு வீரர்களும் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.  நடப்பு ஆண்டு நடைபெற்ற கேபிஎல் இறுதிப்போட்டியில் ஹூப்ளி, பெல்லாரி அணிகள் மோதின. இந்தப்போட்டியில்,  அப்ரார் கவுசி மற்றும் சிஎம் கவுதம் ஆகிய இருவரும்  மந்தமாக பேட் செய்ய ரூ.20 லட்சம் வரை பெற்றதாக போலீசார் தெரிவித்தனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் மேட்ச் பிக்ஸிங்கில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கவுதம் மற்றும் கவுசி ஆகிய இருவரும் பல உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் கவுதம் பங்கேற்றுள்ளார். ஆர்.சி.பி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.