கிரிக்கெட்

மனஅழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இருந்து நிக் மேட்டின்சன் விலகல் + "||" + Nic Maddinson's departure from the Australian team due to depression

மனஅழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இருந்து நிக் மேட்டின்சன் விலகல்

மனஅழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இருந்து நிக் மேட்டின்சன் விலகல்
மனஅழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இருந்து நிக் மேட்டின்சன் விலகினார்.
பெர்த்,

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இருந்த நிக் மேட்டின்சன் மனஅழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.


27 வயதான மேட்டின்சன் 3 டெஸ்ட் மற்றும் 6 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். அவருக்கு பதிலாக கேமரூன் பான்கிராப்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லும் இதே போல் மனநல பிரச்சினையால் தற்காலிகமாக ஓய்வு பெற்றது நினைவு கூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா
‘மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்தது’ என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.