இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட் + "||" + 1st test: Bangladesh all out for 150( Shami 3/27) in their first innings against India on day 1 in Indore.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட் ஆனது.
இந்தூர்,
இந்தியா, வங்காளதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இன்று நடந்தது முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாகப் பந்து வீசியதால் ரன் எடுக்க முடியாமல் வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர்கள் இம்ருல் கைஸும், இஸ்லாமும் தலா 6 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தார்கள். அதையடுத்து முகம்மது மிதுன் முகமது ஷமி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மதிய உணவு இடைவேளை வரை வங்காளதேச அணி 26 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது முஷ்பிகுர் ரஹீம்14 ரன்கள் மற்றும் மொமினுல் ஹக் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். தொடர்ந்து விளையாடிய வங்காள தேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து இருந்தன.
அதையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே எதிர்கொள்ள முடியாத வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்நிலையில் இந்தியா, வங்காளதேச அணிகள் இடையிலான முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து ஆல்- அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து உள்ளது.