கிரிக்கெட்

இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் விடுவிப்பு + "||" + Rishabh pant and Gill released from Indian team

இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் விடுவிப்பு

இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் விடுவிப்பு
இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
கொல்கத்தா,

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த 2-வது விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், மாற்று தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் நடந்து வரும் சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக ரிஷாப் பண்டும், பஞ்சாப் அணிக்காக சுப்மான் கில்லும் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு காயம் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக களம் இறங்க ஏதுவாக ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர் கோனா ஸ்ரீகர் பரத்தை இந்திய அணியினருடன் இணையும் படி தேர்வு குழு பணித்து இருக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்திய அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார்’ - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை தெரிவித்தார்.
2. ‘இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ - விராட்கோலி கருத்து
‘வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
3. ‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து
வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.
4. இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு 31-வது பிறந்த நாள்: கிரிக்கெட் உலகினர் வாழ்த்து
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் 31-வது பிறந்த நாளான நேற்று கிரிக்கெட் உலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
5. ‘இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பேன்’ - தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகராஜ் சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பேன் என்று தென்ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் தெரிவித்தார்.