கிரிக்கெட்

7 முறை அவுட் ஆக்கிய யாசிர் ஷாவுக்கு சுமித் சவால் + "||" + Sumit challenges Yasir Shah, who has been out 7 times

7 முறை அவுட் ஆக்கிய யாசிர் ஷாவுக்கு சுமித் சவால்

7 முறை அவுட் ஆக்கிய யாசிர் ஷாவுக்கு சுமித் சவால்
7 முறை அவுட் ஆக்கிய யாசிர் ஷாவுக்கு சுமித் சவால் விடுத்துள்ளார்.
பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘பிரிஸ்பேனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தேன். நான் அவுட் ஆனதும் அவர் 7 விரல்களை உயர்த்தி காட்டினார். முதலில் அது எனக்கு புரியவில்லை. பிறகு தான் அவரது பந்து வீச்சில் நான் இதுவரை 7 முறை வீழ்ந்து இருப்பதை அறிந்தேன். உண்மையில் அவரது பந்து வீச்சில் நான் ஓரிரு முறை தான் அவுட் ஆகியிருப்பேன் என்று நினைத்தேன். அவரது விரல் சைகை இப்போது எனக்குள் உத்வேகம் அளித்துள்ளது. என்னை விழித்தெழச் செய்துள்ளார். அடுத்து அடிலெய்டில் நாங்கள் சந்திக்க இருக்கிறோம். இந்த முறை நிச்சயம் எனது விக்கெட்டை எளிதாக இழந்து விடமாட்டேன்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...