வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் : காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகல்


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் : காயம் காரணமாக  இந்திய வீரர் தீபக் சகார் விலகல்
x
தினத்தந்தி 19 Dec 2019 10:15 AM GMT (Updated: 19 Dec 2019 10:15 AM GMT)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகியுள்ளார்.

கட்டாக், 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு  அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், தொடரை  நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22-ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது. 

இந்த நிலையில், 3-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபர் சஹாக் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக தீபக் சஹார் விலகியுள்ளார்.

Next Story