கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்:நியூசிலாந்து அணி அறிவிப்புகாயத்தால் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் விலகல் + "||" + 20 Over Cricket Series against India: New Zealand team announcement

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்:நியூசிலாந்து அணி அறிவிப்புகாயத்தால் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்:நியூசிலாந்து அணி அறிவிப்புகாயத்தால் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் விலகல்
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
வெலிங்டன், 

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் ஆகியோர் விலகி உள்ளனர்.

20 ஓவர் போட்டி தொடர்

இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதியில் இருந்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன் ஆகியோர் முழு உடல் தகுதியை எட்டாததால் அணியில் இருந்து விலகி உள்ளனர்.

ஹமிஷ் பென்னட் சேர்ப்பு

இதனால் 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னட் 2½ ஆண்டுக்கும் அதிகமான இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். கடைசியாக 2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த வங்காளதேச அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்று இருந்த அவருக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. ஒரு டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடியது கிடையாது. கடந்த சில சீசன்களாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் அவர் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்.

ஹமிஷ் பென்னட் தேர்வு குறித்து நியூசிலாந்து அணியின் தேர்வாளர் கெவின் லார்சென் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த சில சீசன்களாக குறுகிய வடிவிலான உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ஹமிஷ் பென்னட்டை தேர்வு செய்துள்ளோம். நல்ல வேகமாகவும், பவுன்சாகவும் பந்து வீசுவதுடன், பந்து வீச்சில் வித்தியாசம் காட்டக்கூடிய அவர் 20 ஓவர் போட்டியில் சிறப்பாக செயல்படுவார்’ என்றார்.

நியூசிலாந்து அணி வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி வருமாறு:-

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹமிஷ் பென்னட், டாம் புருஸ், காலின் டி கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், ஸ்காட் குஜ்ஜெலின், டாரில் மிட்செல், காலின் முன்ரோ, ராஸ் டெய்லர், பிளைர் டிக்னெர், மிட்செல் சான்ட்னெர், டிம் செய்பெர்ட், சோதி, டிம் சவுதி.