கிரிக்கெட்

சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல் + "||" + I have more money than you have hair on your head: Shoaib Akhtar takes a jibe at Virender Sehwag

சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல்

சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது  - சோயப் அக்தர் கிண்டல்
சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது என சோயப் அக்தர் கிண்டல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி

முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவில், சோயப் அக்தருக்கு பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார், என கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், தற்போது இது குறித்து அக்தர் கிண்டலாக பதிலளித்துள்ளார். 

அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: 

எனது நண்பர் சேவாக் பேசிய வீடியோ வைரலாகிவிட்டது. ஒரு சாதாரண பையனான நான், சீரியஸாக இல்லாமல் தான் பேசினேன் என்பது சேவாக்கிற்கு தெரியும். ஆனால், அக்தருக்கு பணம் தேவை என்பதால் இந்தியாவை புகழ்கிறார் என அவர் பேசியுள்ளார். 

ஒருவரின் செல்வம் அல்லாவால் தான் கிடைக்கிறது; இந்தியாவால் அல்ல. சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட, (சேவாக் தலையில் முடி குறைவு) என்னிடம் அதிக பணம் இருக்கிறது. நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அக்தர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
2. ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.
3. நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய வீரர் ரோகித் சர்மா காயத்தால் விலகல்
நியூசிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விலகி இருக்கிறார்.
4. நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி; சூப்பர் ஓவரில் இந்தியா ‘திரில்’ வெற்றி: தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
5. 3வது 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை