கிரிக்கெட்

இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் + "||" + If the Indian team does not make it to the Asian Cup, we will ignore the World Cup - Pakistan Cricket Board threatened

இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்
இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.
லாகூர்,

பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் வங்காளதேசத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் சமீப காலமாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடந்து வருவதால் இந்த போட்டியை தங்கள் நாட்டில் நடத்துவது என்பதில் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது சந்தேகம் தான். ஏனெனில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றதில்லை.


இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம்கான் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை எங்களுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வழங்கியுள்ளது. இதை நடத்தும் வாய்ப்பை நாங்கள் இன்னொரு நாட்டுக்கு வழங்க முடியாது. அதற்குரிய அதிகாரமும் எங்களுக்கு இல்லை. எங்கள் நாட்டில் இரண்டு இடங்களில் இந்த போட்டியை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆசிய கோப்பை போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வராவிட்டால் அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க நாங்கள் மறுப்பு தெரிவிப்போம்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது
2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
2. இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டது - விராட் கோலி
இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
3. ‘இந்திய அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார்’ - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை தெரிவித்தார்.
4. ‘இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ - விராட்கோலி கருத்து
‘வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
5. இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் விடுவிப்பு
இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.