கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ; ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தல் + "||" + Iyer leads India with maiden ODI ton

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ; ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தல்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ; ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தல்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை ஸ்ரேயாஸ் அய்யர் பதிவு செய்துள்ளார்.
ஹமில்டன், 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹமில்டன் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா (20 ரன்கள்) மயங்க் அகர்வால் (32 ரன்கள்) ஏமாற்றினர். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விராட் கோலி 51 ரன்கள் அடித்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரேயாஸ் அய்யருக்கு லோகேஷ் ராகுலும் பக்க பலமாக நின்று ஆடினார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 101 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் அய்யர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். தனது 16-வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர், முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். சிறப்பாக ஆடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 107 பந்துகளில் 103 ( 11 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) ரன்கள் அடித்த நிலையில், சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்?
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
3. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 4971ஆக உயர்ந்து உள்ளது.
4. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை என்று பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
5. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.
தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.