கிரிக்கெட்

நலநிதி கிரிக்கெட் இடமாற்றம்: ஷேன் வார்னே விலகல் + "||" + Transfer of welfare cricket Shane Warne dissociated

நலநிதி கிரிக்கெட் இடமாற்றம்: ஷேன் வார்னே விலகல்

நலநிதி கிரிக்கெட் இடமாற்றம்: ஷேன் வார்னே விலகல்
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்ட 10 ஓவர் கண்காட்சி கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் பரவிய காட்டுத்தீயால் பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்ட 10 ஓவர் கண்காட்சி கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் சிட்னியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருப்பதால், இந்த போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் இடமும், தேதியும் மாற்றப்பட்டதால் இந்த போட்டியில் ஆடும் ஒரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். வார்னேவுக்கு பதிலாக கில்கிறிஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு அணிக்கு ரிக்கி பாண்டிங் கேப்டனாக இருக்கிறார். இந்த போட்டியில் முன்னாள் வீரர்கள் பிரையன் லாரா, யுவராஜ் சிங், கோர்ட்னி வால்ஷ், பிரெட்லீ, சைமண்ட்ஸ், மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், வாசிம் அக்ரம், ஷேன் வாட்சன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.