கிரிக்கெட்

மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார் + "||" + Till Modi is in power, we will not get any response from India: Shahid Afridi on India-Pakistan relationship

மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார்

மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது  ; அப்ரிடி சொல்கிறார்
மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இஸ்லமாபாத், 

இந்தியாவில் மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, அந்நாட்டுடனான  உறவு மேம்படாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அப்ரிடியிடம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அக்கேள்விக்கு பதிலளித்த அப்ரிடி, இந்திய பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.  அப்ரிடி கூறுகையில்,’  மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. மோடி, சிந்திப்பதை அனைவரும் அறிந்துள்ளோம்.  எதிர்மறை விஷயங்களை சார்ந்தே அவரது சிந்தனை இருக்கிறது.  ஒரே ஒரு நபரால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு  சிதைக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்ப்பது இது இல்லை.

எல்லையில் இருபுறமும் உள்ள மக்களும்,  ஒருவருக்கொருவர் நாட்டிற்கு பயணிக்க விரும்புகின்றனர். மோடி என்ன விரும்புகிறார்  அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்
டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
2. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு
சீனாவில் உண்ணி கடியால் பரவும் புதிய தொற்று நோயால் 7 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
3. ஐ.நா.சபைக்கு இந்தியா ரூ.115 கோடி நிதி - இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்
ஐ.நா.சபையுடனான வளர்ச்சி கூட்டு நிதிக்காக ரூ.115 கோடி நிதியை இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்.
4. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
5. விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-மின்சார ரயில்கள் ரத்து
மும்பையில் இன்றும் நாளையும் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.