ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - புளோம்பாண்டீனில் இன்று நடக்கிறது


ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - புளோம்பாண்டீனில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 3 March 2020 11:43 PM GMT (Updated: 3 March 2020 11:43 PM GMT)

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீனில் இன்று நடக்கிறது


* பெட் கோப்பை டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று சீனாவை எதிர்கொண்ட இந்தியா 0-2 என்ற கணக்கில் தோற்றது. இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 6-1, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் குயாங் வாங்கிடமும், ருதுஜா போசாலே 4-6, 2-6 என்ற நேர் செட்டில் சூவாய் ஜாங்கிடமும் தோல்வியை தழுவினர். இந்திய அணி இன்று உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.

* கொரோனா வைரஸ் பாதிப்பால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி ஜூலை 24-ந்தேதி தொடங்க முடியாமல் போனால் கூட, 2020-ம் ஆண்டிலேயே ஏதாவது ஒரு கட்டத்தில் நடத்தலாம் என்று ஜப்பான் ஒலிம்பிக் மந்திரி செய்கோ ஹஷிமோட்டா தெரிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீனில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.

* நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரன் எடுக்க முடியாமல் திணறிய இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் எல்.பி.டபிள்யூ. ஆனார். ‘பெரிய வீரர்கள் அடிக்கடி போல்டு, எல்.பி.டபிள்யூ. ஆகும் போது, கூடுதல் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.’ என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

* உலக கோப்பை கால்பந்து போட்டி ஆசிய மண்டலத்திற்கான தகுதி சுற்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் ஜூன் 9-ந்தேதி நடைபெறும் என்று இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.


Next Story