கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’ + "||" + Saurashtra team all-out in 425 runs in Ranji Cup cricket final

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
ராஜ்கோட்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பெங்கால் இடையிலான இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 171.5 ஓவர்களில் 425 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. தர்மேந்திரசிங் ஜடேஜா 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பெங்கால் அணியும் நிதான பாணியை கடைபிடித்ததால் ஸ்கோர் வேகம் மந்தமானது. ஆட்ட நேரம் முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. சுதிப் சட்டர்ஜி 47 ரன்னுடனும், விருத்திமான் சஹா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


இதற்கிடையே சவுராஷ்டிரா வீரர் புஜாரா முதுகு வலி காரணமாக நேற்று பீல்டிங் செய்ய வரவில்லை. தேவை ஏற்பட்டால் 2-வது இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்வார் என்று சவுராஷ்டிரா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. சி.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் டிரின்பாகோ
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.