இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: மழையால் ஆட்டம் துவங்குவதில் தாமதம்


இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி:  மழையால் ஆட்டம் துவங்குவதில் தாமதம்
x
தினத்தந்தி 12 March 2020 7:58 AM GMT (Updated: 2020-03-12T13:28:34+05:30)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. 

இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்க உள்ளது. 

ஆனால், தர்மசாலாவில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பிற்பகல் 1.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்தப் போட்டி தாமதம் ஆகியுள்ளது. 

Next Story