கொரோனா சோதனைக்கு பிறகு நியூசிலாந்து வீரர் பெர்குசன் தாயகம் திரும்பினார்


கொரோனா சோதனைக்கு பிறகு நியூசிலாந்து வீரர் பெர்குசன் தாயகம் திரும்பினார்
x
தினத்தந்தி 15 March 2020 11:52 PM GMT (Updated: 15 March 2020 11:52 PM GMT)

கொரோனா சோதனைக்கு பிறகு நியூசிலாந்து வீரர் பெர்குசன் தனது தாயகம் திரும்பினார்.

ஆக்லாந்து,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 28 வயதான லோக்கி பெர்குசனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. இந்த நிலையில் பெர்குசன் நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு தாயகம் திரும்பினார். ஆக்லாந்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனக்கு லேசாக சளித்தொல்லை இருந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்னை சோதனை செய்தனர். சொந்த நாட்டுக்கு வந்து விட்டதால் இப்போது மகிழ்ச்சியில் உள்ளேன்.

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் இன்றி விளையாடியது புதுமையான அனுபவமாக உணர்ந்தோம். இருப்பினும் ஆட்டத்தின் முடிவு (தோல்வி) ஏமாற்றம் அளித்தது’ என்றார்.

Next Story