14 நாட்கள் தனிமையில் இருக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தரவு


14 நாட்கள் தனிமையில் இருக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2020 12:02 AM GMT (Updated: 19 March 2020 12:02 AM GMT)

14 நாட்கள் தனிமையில் இருக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்,

3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்தது. தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் பலத்த மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பீதியால் தென்ஆப்பிரிக்க அணியினர் எஞ்சிய இரு ஆட்டங்களையும் ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பினர். அப்போது பெரும்பாலான வீரர்கள் கொரோனா பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிந்திருந்தனர்.

இந்த நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சொந்த நாட்டுக்கு திரும்பிய தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களுடன் நெருங்கி பழகுவதையும், வெளியில் சுற்றுவதையும் தவிர்த்து, குறைந்தது 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வீரர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ அது குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளப்படும் என்று தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷூயப் மஞ்ச்ரா தெரிவித்துள்ளார்.


Next Story