கிரிக்கெட்

ஐ.சி.சி. அறிவிப்பு: ரோகித் ஆதங்கம் + "||" + ICC Notice: Rohit frustrated

ஐ.சி.சி. அறிவிப்பு: ரோகித் ஆதங்கம்

ஐ.சி.சி. அறிவிப்பு: ரோகித் ஆதங்கம்
‘புல்ஷாட்’ அடிப்பதில் சிறந்தவர் யார் என்ற கேள்வியில் தனது பெயர் இடம்பெறாததற்கு ரோகித் ஆதங்கம் டுவிட்டரில் ஆதங்கம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா), ஹெர்சிலி கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), விராட் கோலி (இந்தியா) ஆகியோரில் ‘புல்ஷாட்’ அடிப்பதில் சிறந்தவர் யார் என்று அவர்களின் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரசிகர்களின் கருத்தை கேட்டுள்ளது. 

ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரரான இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இத்தகைய ஷாட்டுகள் அடிப்பதில் கைதேர்ந்தவர். ஆனால் தனது பெயர் இந்த போட்டியில் இடம் பெறாததால் எரிச்சலடைந்துள்ள ரோகித் சர்மா டுவிட்டரில், ‘யாருடைய பெயரோ இங்கு விடுபட்டுள்ளது???....வீட்டில் இருந்தபடி செயல்படுவது எளிதல்ல என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.