கிரிக்கெட்

வீட்டில் இருக்கும்படி ‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டிய அஸ்வின் + "||" + Ashwin pointed out to Mankat out to be at home

வீட்டில் இருக்கும்படி ‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டிய அஸ்வின்

வீட்டில் இருக்கும்படி ‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டிய அஸ்வின்
‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டி வீட்டில் இருக்கும்படி அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின், கொரோனா விழிப்புணர்வுக்கு வித்தியாசமாக ‘மன்கட்’ அவுட் முறையை பயன்படுத்தியுள்ளார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது இதே நாளில் நான் ‘மன்கட்’ முறையில் எதிரணி வீரரை ரன்-அவுட் ஆக்கிய சம்பவத்தை சிலர் எனக்கு ஞாபகப்படுத்தியதோடு அந்த போட்டோவையும் எனக்கு அனுப்பியுள்ளனர். 

தேசமே முடக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில், அந்த ரன்-அவுட் காட்சியை நாட்டு மக்களுக்கு நினைவூட்டுவது சரியானதாக இருக்கும். தேவையில்லாமல் வெளியே சென்று அவுட் ஆகி விடாதீர்கள். உள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.