கிரிக்கெட்

5 ஆயிரம் பேருக்கு ஒரு மாத உணவுப்பொருள் வழங்கும் தெண்டுல்கர் + "||" + Tendulkar provides food for 5 thousand people a month

5 ஆயிரம் பேருக்கு ஒரு மாத உணவுப்பொருள் வழங்கும் தெண்டுல்கர்

5 ஆயிரம் பேருக்கு ஒரு மாத உணவுப்பொருள் வழங்கும் தெண்டுல்கர்
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 5 ஆயிரம் பேரின் ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் செலவை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மும்பை, 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட ஏற்கனவே ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். 

தற்போது ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 5 ஆயிரம் பேரின் ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். மும்பை சிவாஜி நகர், கோவந்தி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு அப்னாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இதை வழங்குகிறார்.