கிரிக்கெட்

எப்படி இருக்கிறது எனது புதிய தோற்றம்? ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய சச்சின் தெண்டுல்கர் + "||" + Sachin Tendulkar Posts Pictures Of His New Hairdo, Fans Pour In Love

எப்படி இருக்கிறது எனது புதிய தோற்றம்? ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய சச்சின் தெண்டுல்கர்

எப்படி இருக்கிறது எனது புதிய தோற்றம்? ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய சச்சின் தெண்டுல்கர்
எப்படி இருக்கிறது எனது புதிய தோற்றம்? என ரசிகர்களிடம் சச்சின் தெண்டுல்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைப்படும் சச்சின் தெண்டுல்கர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். கிரிக்கெட் விளையாடுவதைத்தான் சச்சின் நிறுத்தினாரே தவிர ஆனால் அவருக்கும் கிரிக்கெட் உலகிற்கும் உள்ள நட்பு இன்னும் சிறப்பாகவே இருந்து வருகிறது. 

மேலும் அவர் சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களிடம் தொடர்ந்து  உரையாடி வருகிறார். சச்சின் ஆட்டத்திற்கு எனத் தனி ரசிகர்கள் எப்படி உலகம் முழுக்க இருக்கிறார்களோ அதே போல அவரது ஹேர்ஸ்டைலை ரசிப்பதற்கு என்று மிக்கப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் மிகையல்ல.

இந்நிலையில், சச்சின் தெண்டுல்கர் புதிய ஹேர்ஸ்டைலுடன் உள்ள ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். சச்சின் தெண்டுல்கரின் இந்தப் புதிய ஹேர்ஸ்டலை பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் தனக்குத் தானே முடிவெட்டிக் கொண்டுள்ளார். 

இது குறித்து சச்சின், “சதுர வடிவ தோற்றத்தில் சொந்தமாக முடிவெட்டிக் கொண்டேன். எப்படி இருக்கிறது எனது புதிய தோற்றம்? என்று  கூறியுள்ளார். இதனுடன் கண்ணாடி முன் நின்று அவர் முடிவெட்டிக் கொள்ளும் படத்தையும் இணைத்துள்ளார். 

இந்தியாவுக்காக 100 சர்வதேச சதங்களை அடித்த கிரிக்கெட் ஜாம்பாவனுக்கு அவரது ரசிகர்கள் அழகான கருத்துகளை வாரி வழங்கி வருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே சச்சின் தெண்டுல்கர், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வீட்டில் நேரத்தை செலவிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்த சச்சின் தெண்டுல்கர்!
திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்துள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
2. மும்பையில் 4000 ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளித்த சச்சின் தெண்டுல்கர்!
மும்பையில் வருமானமின்றி தவித்த 4000 ஏழை எளிய மக்களுக்கு சச்சின் தெண்டுல்கர் நிதியுதவி அளித்துள்ளார்.
3. தனது பழைய நாட்களை நினைவு கூர்ந்த சச்சின் தெண்டுல்கர்!
கிரிக்கெட் ஜாம்பவானா சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் தனது பழைய நாட்களை நினைவு கூர்ந்தார்.
4. நமஸ்தே டிரம்ப் உரையில் டொனால்டு டிரம்பின் சூ-சின்- வீரோட் உச்சரிப்பு வைரலாகி உள்ளது
'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் சச்சின் தெண்டுல்கரின் பெயரை தவறாக உச்சரித்ததற்காக டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் சரமாரியாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
5. தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை சந்திக்க ஆசை - சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட்
டெஸ்ட் தொடரின் போது உதவிய தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை மீண்டும் சந்திக்க ஆசை என சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.