கிரிக்கெட்

லாக் டவுனில் ஹர்மன்பிரீத் கவுர் வெளியிட்டு மேஜிக் வீடியோ - ரசிகர்கள் குழப்பம் + "||" + Harmanpreet Kaur’s Magic Trick Leaves Fans Stumped

லாக் டவுனில் ஹர்மன்பிரீத் கவுர் வெளியிட்டு மேஜிக் வீடியோ - ரசிகர்கள் குழப்பம்

லாக் டவுனில் ஹர்மன்பிரீத் கவுர் வெளியிட்டு மேஜிக் வீடியோ - ரசிகர்கள் குழப்பம்
இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் லாக் டவுனில் ஹர்மன்பிரீத் கவுர் வெளியிட்டு மேஜிக் வீடியோ ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பொது மக்கள் வீட்டில் தங்கியிருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த லாக் டவுன் காரணமாக அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களுடைய நேரத்தை வீட்டிலேயே செலவழித்து வருகிறார்கள். 

இந்நிலையில், இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு மேஜிக் செய்யும் வீடியோவைப் பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

 அந்த வீடியோவில், ஹர்மர்பிரீத் கவுர் கண்ணாடி முன்பு ஒரு கிளாஸில் பந்துடன் நிற்கிறார். பிறகு அவர் அந்தப் பந்தைக் கண்ணாடியை நோக்கி வீசுகிறார். ஆனால் பந்து திரும்பி வராமல், கண்ணாடியின் மறுபக்கத்தில் எதிரொலிக்கு கிளாஸில் அந்த பந்து விழுகிறது.

“கண்ணாடி, சுவரில் கண்ணாடி, அதை அனைவரும் மறுபரிசீலனை செய்வார்கள்,” என்று அந்த வீடியோவுக்குத் ஹர்மர்பிரீத் கவுர் தலைப்பிட்டுள்ளார். 

வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களில் அது மிகவும் வைரலானது, ரசிகர்கள் பலரும் அவர் எப்படி அதைச் செய்தார் என்பதை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
View this post on Instagram

Mirror, mirror on the wall, who the realest of them all.

A post shared by Harmanpreet Kaur (@imharmanpreet_kaur) on