கிரிக்கெட்

ஆர்சிபி அணியை விட்டு விலக மாட்டேன் - விராட் கோலி + "||" + Till the time I play IPL, I’ll never leave RCB: Virat Kohli tells AB de Villiers

ஆர்சிபி அணியை விட்டு விலக மாட்டேன் - விராட் கோலி

ஆர்சிபி அணியை விட்டு விலக மாட்டேன் - விராட் கோலி
ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மும்பை,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ஆர்சிபி வீரர்கள் விராட் கோலியும் டிவில்லியர்ஸும் உரையாடினார்கள். அப்போது விராட் கோலி கூறியதாவது:

ஆர்சிபி அணியை விட்டு விலகுவது குறித்து என்னால் யோசிக்கக் கூட முடியாது. ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன். ஐபிஎல்லில் விளையாடும் வரை உரிமையாளருக்காக விளையாட விரும்புகிறேன். அணியை விட்டு வெளியேறும் எந்த சூழ்நிலையும் இதுவரை இல்லை.

டிவில்லியர்ஸ் கூறியதாவது:

 நான் நிறைய ரன்கள் எடுக்கவேண்டும். எனக்கும் ஆர்சிபி அணியை விட்டு விலக விருப்பமில்லை. வருங்காலத்தில் இதன்மூலம் கிடைத்த உறவுகளையே எண்ணிப் பார்ப்போம். குறிப்பிட்ட ஆட்டத்தை அல்ல. சில அருமையான தருணங்களை எண்ணிக்கொள்வோம். அதை ஒருபோதும் இழக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சச்சின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும்: இர்பான் பதான் கணிப்பு
சச்சினின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
2. டோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு நீங்காமல் இருக்கும், அவருக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக விளங்கிய டோனி, நாட்டின் 74-வது சுதந்திர தினமான நேற்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
3. கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது - விராட் கோலி
கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது என விராட் கோலி கூறியுள்ளார்.
4. போலியான தகவல்களை பரப்புவது கொரோனா பரவுவதை காட்டிலும் ஆபத்தான விஷயம் - விராட் கோலி வீடியோ
கொரோனா பரவுவதால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் போலி தகவல்களை பரப்ப வேண்டாம் என டிக்டாக் சார்பாக விராட் கோலி வீடியோ வெளியிட்டுள்ளார்.
5. கொரோனா: அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் - விராட் கோலி
அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் என விராட் கோலி கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...