கிரிக்கெட்

விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் எம்.எஸ்.டோனி எனது ஹீரோக்கள் - கபில்தேவ் + "||" + Followed my heroes Vivian Richards and MS Dhoni: Kapil Dev on his lockdown look

விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் எம்.எஸ்.டோனி எனது ஹீரோக்கள் - கபில்தேவ்

விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் எம்.எஸ்.டோனி எனது ஹீரோக்கள் - கபில்தேவ்
விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் எம்.எஸ்.டோனி எனது ஹீரோக்கள் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
மும்பை,

இந்தியாவின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை வென்றவருமான கபில் தேவ் தனது லாக் டவுன் நேரத்தில் தனது புதிய தோற்றத்தை குறித்து கூறியுள்ளார். விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் எம்.எஸ். டோனி ஆகியோரால் ஈர்க்கப்பட்டிருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார். 

கபில் தேவ், 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு எம்.எஸ். தோனி விளையாட்டில் மொட்டை தோற்றத்தைக் கண்டதாகவும், அதை ஒருநாள் நானும் செய்ய வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறினார்.

அதனை தொடர்ந்து "விவியன் ரிச்சர்டின் தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். அவர் என் ஹீரோ, எனவே அவரை மாதிரி ஏன் நான் இருக்கக்கூடாது? என் ஹீரோவைப் பின்தொடருவேன். நான் டோனியையும் நேசிக்கிறேன். அவரும் என் ஹீரோ தான்.

 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு, அவர் தனது தலைமுடியையெல்லாம் மொட்டையடித்துவிட்டார். எனவே ஒரு நாள் நானும் அவ்வாறே செய்வேன் என்று முடிவு செய்தேன். இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதனை நான் செய்தேன் என்று கபில் தேவ் ஸ்போர்ட்ஸ் டேக்கில் கூறியுள்ளார்.

கபில் தேவ் தனது  புதிய தோற்றத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மொட்டையடித்த தலையுடன் காணப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகுபலி கட்டப்பாவாக மாறிய கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது புது கெட்டப்பை வெளியிட்டுள்ளார்.