கிரிக்கெட்

‘கடைசி வரை கொல்கத்தா அணிக்காக ஆட வேண்டும்’ - ரஸ்செல் விருப்பம் + "||" + Andre Russell wants to play for KKR until retirement

‘கடைசி வரை கொல்கத்தா அணிக்காக ஆட வேண்டும்’ - ரஸ்செல் விருப்பம்

‘கடைசி வரை கொல்கத்தா அணிக்காக ஆட வேண்டும்’ - ரஸ்செல் விருப்பம்
கடைசி வரை கொல்கத்தா அணிக்காக ஆட வேண்டும் என்று ரஸ்செல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான 32 வயதான ஆந்த்ரே ரஸ்செல் ஆன்-லைன் உரையாடலில் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் போது நான் உண்மையிலேயே சிலிர்த்து போகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். கரிபீயன் பிரிமியர் லீக் போட்டியின் போதும் இதே போன்று உத்வேகம் ஏற்படுகிறது. ஆனாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதுவும் கொல்கத்தா ஈடன்கார்டனில் ஆடுவதற்கு நிகர் எதுவும் கிடையாது. கொல்கத்தா அணிக்காக 6 சீசனில் விளையாடி வருகிறேன். ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவித்து ஆடியிருக்கிறேன். எனது கடைசி ஐ.பி.எல். போட்டி வரை கொல்கத்தா அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். 2 ஆட்டங்களில் சோபிக்காமல், அடுத்து 3-வது ஆட்டத்தில் இறங்கும் போதும் கூட ரசிகர்களின் ஆரவாரமும், வரவேற்பும் ஒரே மாதிரியே இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.

இவ்வாறு ரஸ்செல் கூறினார்.