கிரிக்கெட்

மகளின் சமையலை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்! + "||" + Thanks for the fabulous beetroot kebabs @saratendulkar

மகளின் சமையலை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்!

மகளின் சமையலை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்!
சச்சின் தெண்டுல்கருக்கு அவருடைய மகள் சாரா டெண்டுல்கர் பீட்ரூட் கபாப் செய்து கொடுத்து இருக்கிறார்.
மும்பை,

லாக் டவுன் காலத்தில் மற்ற முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்களைப் போலவே சச்சின், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகிறார். இந்தநிலையில்,  சச்சின் தெண்டுல்கருக்கு அவருடைய மகள் சாரா டெண்டுல்கர் பீட்ரூட் கபாப் செய்து கொடுத்திருக்கிறார். தெண்டுல்கர், தட்டு நிறைய இருக்கும் கபாப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சச்சின் தெண்டுல்கர், தனது மகளுக்கு 'அற்புதமான' கபாப்களுக்கு நன்றி தெரிவித்து, ​​இந்திய பேட்டிங் ஜாம்பவான் 60 வினாடிகளில் தட்டு காலியாகி விட்டதாகவும் கூறினார். “ 60 வினாடிகளில் முடிந்தது! அற்புதமான பீட்ரூட் கபாப்களுக்கு நன்றி @saratendulkar,” என்று புகைப்படத்துக்கு தெண்டுல்கர் பெயரிட்டுள்ளார். தெண்டுல்கர் புகைப்படம் பகிர்ந்த சில நேரத்தில், அவரது ரசிகர்கள் அபிமான செய்திகளுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.