பெரிய சைஸ் உடைகள் எல்லாம் இப்போது கடந்தகாலம் ஆகிவிட்டது - ரெய்னாவை ட்ரோல் செய்த பிரைன் லாரா!


பெரிய சைஸ் உடைகள் எல்லாம் இப்போது கடந்தகாலம் ஆகிவிட்டது - ரெய்னாவை ட்ரோல் செய்த பிரைன் லாரா!
x
தினத்தந்தி 8 May 2020 9:53 AM GMT (Updated: 2020-05-08T17:54:22+05:30)

பெரிய சைஸ் உடைகள் எல்லாம் இப்போது கடந்தகாலம் ஆகிவிட்டது என ரெய்னாவை பிரைன் லாரா ட்ரோல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் உள்ள மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே சுரேஷ் ரெய்னாவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்தும் லாக்டவுனுக்கு மத்தியில் வீட்டிலேயே நேரத்தைச் செலவழித்து வருகின்றார்.
 
லாக் டவுன் காலகட்டத்தில் சுரேஷ் ரெய்னா சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் மற்றும் அவரது ரசிகர்களுடன் தனது ஒர்க்அவுட் விஷயங்கள் மற்றும் த்ரோபேக் படங்களுடன் அவர்களை மகிழ்வித்து வருகிறார். 

இந்நிலையில்,  வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் பிரைன் லாரா, 2003ம் ஆண்டு சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

“யார் இந்த இளைஞர்கள்?? ரசிகர் தருணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் சிறந்த வீரராக உருவாகியுள்ளார். #2003 #tell,” புகைப்படத்துக்கு லாரா தலைப்பிட்டார். சுரேஷ் ரெய்னா இந்த பதிவை ஒப்புக் கொண்டு, அதைத் தனது ரசிகர் தருணம் என்று அழைத்தார். லாரா பதிவிட்ட புகைப்படத்தில், ரெய்னா பெரிய  சைஸ்  பேன்ஸ் அணிந்திருந்தார். அதைக் குறிப்பிட்டு லாரா, சுரேஷ் ரெய்னாவின் ஃபேஷன் சென்ஸை கிண்டல் செய்தார். “@sureshraina3 இப்போது பெரிய சைஸ் உடைகள் எல்லாம் இப்போது கடந்தகாலம் ஆகிவிட்டது.  #lastdance,” என்று லாரா கமெண்ட் செய்தார்.

Next Story