ரெய்னாவை கட்டியணைக்கும் டோனி: விஜயகாந்த்தின் வானத்தைப் போல பட பாடலை வெளியிட்ட சிஎஸ்கே


ரெய்னாவை கட்டியணைக்கும் டோனி: விஜயகாந்த்தின் வானத்தைப் போல பட பாடலை வெளியிட்ட சிஎஸ்கே
x
தினத்தந்தி 9 May 2020 8:13 AM GMT (Updated: 2020-05-09T13:43:08+05:30)

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அவ்வப்போது டோனி, ரெய்னாவின் அன்றாட செயல்பாடுகள் குறித்து வீடியோவை வெளியிட்டு வருகிறது.

சென்னை,

கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊடரங்கால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். பொழுதுபோக்கிற்காகவும், ரசிகர்களுக்காவும் பலர் இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டை மூலம் சக வீரர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்றும் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடைபெறவில்லை. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதாமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அவ்வப்போது டோனி, ரெய்னாவின் அன்றாட செயல்பாடுகள் குறித்து வீடியோவை வெளியிட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் டோனி, ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் சிஎஸ்கேவின் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பைக் கண்டு உணர்ச்சி வசப்படுகின்றனர். அப்போது ரெய்னாவை கட்டியணைக்கும் டோனி, என்ன தாடியெல்லாம் வெள்ளையாயிடுச்சு என்று கலாய்க்கிறார். இந்த வீடியோவின் பின்னணியில் கேப்டன் விஜயகாந்த்தின் வானத்தைப் போல பட பாடலான எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் ஒலிக்கிறது.

Next Story