கிரிக்கெட்

தமிழ் பாடலுக்கு நடனம் ஆடிய வார்னர் + "||" + Warner danced to Tamil song

தமிழ் பாடலுக்கு நடனம் ஆடிய வார்னர்

தமிழ் பாடலுக்கு நடனம் ஆடிய வார்னர்
தமிழ் பாடலுக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது.
சிட்னி, 

ஆஸ்திரேலிய அதிரடி வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே பொழுதை கழித்து வருகிறார். சக வீரர்களுடன் சமூக வலைதளம் மூலம் உரையாடுவது, மனைவி கேன்டிசுடன் நடனம் ஆடி மகிழ்வது என்று நேரத்தை செலவிடுகிறார். சமீபத்தில் டிக்-டாக்கில் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி அதை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவரும், மனைவி கேன்டிஸ், மகள் இன்டி ரா ஆகியோர் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த, தேவர்மகன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பாடலுக்கு இசையோடு அழகாக நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த நடனத்தை வார்னர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பதிவிட்டு, ‘நாங்கள் மீண்டும் வந்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ‘லைக்’ கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடராஜன் சிறப்பாக செயல்பட வாய்ப்பு குறைவு" - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் கருத்து
டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.