இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின்-கங்குலி - ஐ.சி.சி.,


இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின்-கங்குலி - ஐ.சி.சி.,
x
தினத்தந்தி 13 May 2020 5:05 AM GMT (Updated: 2020-05-13T10:35:44+05:30)

இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின் - கங்குலி என ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.

லண்டன்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில், 

இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின்-கங்குலி. ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து, 8,227 ரன்கள் (சராசரி 47.55) எடுத்துள்ளனர். வேறு எந்த ஜோடியும் 6,000 ரன்களை தாண்டவில்லை,' என தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து சச்சின் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில்,

நமது சிறப்பான தருணங்களை நினைவுபடுத்துகிறது 'தாதா'. அவர் அனுப்பிய 'டுவிட்டர்' செய்தியில்,'2 புதிய பந்துகள், ஆஹா... எப்படியும் 4,000 ரன்கள் இன்னும் அதிகமாக நமது 'பார்ட்னர்ஷிப்பில்' எடுத்திருப்போம். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே 'கவர் டிரைவ்' முறையில் பந்துகள் பவுண்டரிக்கு பறப்பது போல தெரிகிறது. 50 ஓவர்களும் இப்படித் தான் நடந்திருக்கும். இன்னும் எவ்வளவு ரன்கள் நாம் எடுத்திருப்போம்,' என சொல்லுங்கள்,' என கேட்டிருந்தார்.

இதற்கு உடனடியாக பதில் அனுப்பினார் கங்குலி. அவர் அனுப்பிய 'டுவிட்டர்' செய்தியில்,'2 புதிய பந்துகள், ஆஹா... எப்படியும் 4,000 ரன்கள் இன்னும் அதிகமாக நமது 'பார்ட்னர்ஷிப்பில்' எடுத்திருப்போம். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே 'கவர் டிரைவ்' முறையில் பந்துகள் பவுண்டரிக்கு பறப்பது போல தெரிகிறது. 50 ஓவர்களும் இப்படித் தான் நடந்திருக்கும்,' என்றார்.

Next Story